● கு. மாரிமுத்து, சாலிகிராமம்.
எனக்கு தற்போது 52 வயது. இதுவரை வாழ்க்கையில் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை. இனிமேலாவது நன்றாக இருக்குமா? பெயர் மாற்றம் தேவையா?
மிதுன லக்னம். லக்னாதிபதி புதன் 10-ல் நீசம். 10-க்குடைய குரு 12-ல் மறைவு. அவருக்கு வீடு கொடுத்த சுக்கிரன் 8-ல் மறைவு. 6-க் குடைய செவ்வாய் 10-ல். உங்கள் ஜாதகப் பலனே பரிதாபத்துக்கு ரியதுதான். சட்டி யில் இருந்தால் தானே அகப்பை யில் வரும்? தலை யெழுத்தே நன்றாக இல்லை என்னும்போது பெயர் மாற்றம் என்ன யோகம் செய்து விடும்? இருப்பதைக்கொண்டு திருப்தி அடைந்து வாழ்க்கையை ஓட்டுங்கள். வற்றாத ஜீவநதிகளுக்குச் சமம் அதீதயோக ஜாதகம். மழை பெய்தால் நீர்நிறையும் குளம் குட்டைகளுக்குச் சமம் யோக ஜாதகம்! உங்கள் ஜாதகம் மணற்பரப்பு போன்றது. எவ்வளவு மழை பெய்தாலும் வறண்டுவிடும். ஆகவே கவலைப் படாமல், கற்பனைகள் செய்யாமல், ஆசைக் கனவு களுக்கு இடம் கொடுக் காமல் மூன்றுவேளை சாப்பாட்டுக்கும், வாடகை வீடானாலும் (ரோட்டில் கூடாரம் அமைக்காமல்) குடியிருப்புக்கும் வழிவிட்டதற்காக இறைவனுக்கு நன்றி சொல்லி காலத்தை ஓட்டுங்கள்! குரு ராசி யைப் பார்ப்பதால் வறுமை, தரித்திரம் வராது.
● ஜி.வி. உமா, எடப்பாடி.
என் தந்தை- தாய் இறந்துவிட்டார்கள். என் தந்தை சொத்து சம்பந்தமாக நீண்டகாலமாக வழக்கு நடக்கிறது. எனக்கு சாதகமான தீர்ப்பு எப்போது கிடைக்கும்?
மீன லக்னம், சித்திரை நட்சத்திரம், துலா ராசி. 2007 முதல் சனி தசை. இது நான்காவது தசை- விரயாதிபதி தசை. இதில் 2020 ஏப்ரல்வரை 8-ல் உள்ள சந்திரபுக்தி. லக்னத்தை குரு பார்க்கிறார். 10-க்குடைய குரு 9-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகம். அதனால் பூர்வீக சொத்து கண்டிப்பாகக் கிடைக்கும். 2020-ல் சனிப்பெயர்ச்சிக்குப்பிறகு கிடைக் கும். இரண்டு பரிகாரம் செய்யவும். முதலிலில் உடனடியாக நங்கவள்ளி சென்று லட்சுமி நரசிம்மருக்கு ஒரு அபிஷேக பூஜை செய்யவும். தொடர்புக்கு: பாலாஜி, செல்: 94435 15904; சின்ன பாலாஜி, செல்: 94439 41014. அடுத்து நாமக்கல் அருகில் சேந்த மங்கலம் சென்று தத்தாத்ரேய ருக்கு ஒருமுறை அபிஷேகம், குருநாதருக்கும் அபிஷே கம் செய்து வேண்டிக் கொள் ளவும். தொடர்புக்கு: பால சுப்பிரமணியம் (ஸ்ரீராம்), செல்: 93454 38950.
● ஆர். சித்ரா, கோவை.
என் மகள் ஹரிதா பி.ஈ., ஏரோநாட் டிக்கல் முடித்து சிவில் சர்வீஸ் பரீட்சைக் கான பயிற்சி வகுப்பு படிக் கிறாள். அவ ளுக்கு அரசுப் பணி கிடைக் குமா?
ஹரிதா தனுசு லக்னம், கடக ராசி, பூச நட்சத்திரம். நடப்பு வயது 24. தற்போது கேது தசை 2018 ஜூன் முதல் ஆரம்பம். 9-க்குடைய சூரியனும் 12-க்குடைய செவ்வாயும் பரிவர்த்தனை. 10-க்குடைய புதன் 11-ல். அரசு வேலைக்கு இடம் உண்டு. ஆனாலும் நடப்பு கேது தசை சில தடைகளை ஏற்படுத்தலாம். அதற்காக வாஞ்சாகல்ப கணபதி ஹோமம், வாக்கணபதி ஹோமம், ஹயக்ரீவர்- தட்சிணாமூர்த்தி- நீலுசரசுவதி-வாக் வாதினி ஹோமம் செய்து ஹரிதா வுக்கு, கலச அபிஷேகம் செய்ய வேண்டும். அத்துடன் பெற்றோர் ஆரோக்கியம், ஆயுள் தீர்க்கம், தொழில் விருத்தி, முன்னேற் றத்துக்கு மேலும் சில ஹோமங்கள் செய்ய வேண்டும். காரைக்குடி, சுந்தரம் குருக்கள் செல்: 99942 74067-ல் தொடர்புகொண்டு விவரங்கள் அறியலாம்.
● ஜி. ஸ்ரீரெங்கநாதன், திருச்சி- 3.
தங்கள் எழுத்துகளால் ஜோதிட அறிவும் அனுபவ அறிவும் பக்குவமும் பெற்றி ருக்கிறேன். அதற்காக ஆயிரம் நன்றி! தாயார்வழி சொத்து கள் சம்பந்தமாக நீதிமன்றத் தில் எனக்கு சாதகமான தீர்ப்பு வந்தும் கடந்த ஏழு வருடங் களாக அவற்றைப் பெறமுடிய வில்லை. என்ன பரிகாரம்?
சிம்ம லக்னம், ரிஷப ராசி, ரோகிணி நட்சத்திரம். 9-ல் ராகு இருப்பதால் பூர்வீக சொத்தை அடைவதில் சிக்கல்! 9-க்குடைய செவ்வாய் 4-ல் ஆட்சி. 5-க்குடைய குரு 12-ல் உச்சம். அதுவும் தடைக்கு ஒரு காரணம். என்றாலும், அம்சத் தில் குரு மீனத்தில் ஆட்சி. புதுக் கோட்டை- பொன்னமராவதி பாதையில் குழிபிறை கடந்து செவலூர் சென்று பூமிநாதருக்கும் ஆரணவல்லிலியம்மனுக்கும் சாதாரண அபிஷேக பூஜை செய்து வேண்டிக்கொள்ளவும். அடுத்து சொத்துகள் அனுபவ சித்திக்குப் பிறகு மறுபடியும் போய் 108 சங்கு வைத்து ஹோமம் செய்து சங்காபிஷேக பூஜை செய்யவும். தொடர்புக்கு: ராஜப்பா குருக்கள், செல்: 98426 75863. அத்துடன் உங்களுக்குத் தோதான நாளில் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமிக்கும் பூஜை செய்யவும்.
● வி. தியாகராஜன், சேலம்- 3.
பி.எஸ்ஸி., பி.எல்.ஐ.எஸ். படித்த நான் லக்னாதிபதி புதன் தசையில் தனியார் பொறியியல் கல்லூரியில் உதவி நூலகராகப் பணிபுரிந்து, அட்டமச்சனி, 10-ல் குரு வந்த நேரத்தில் எனது வேலை பறிபோனது. கடந்த 13 வருட காலமாக வனவாச வாழ்க்கைதான். அடிமை, கூலித் தொழில், குறைந்த வருவாய், நிம்மதியற்ற வாழ்க்கை. நல்ல மாற்றம் எப்போது ஏற்படும்?
மிதுன லக்னம், விருச்சிக ராசி, விசாக நட்சத்திரம். 2013 முதல் 2033 வரை சுக்கிர தசை. சுக்கிர தசை வருவதற்கு முன்பே கேது தசையிலேயே சூறாவளி அடிக்கத் தொடங்கி விட்டது. அடுத்து 2020-ல் ஏழரைச்சனி முடிந்ததும் உங்கள் வாழ்க்கையில் புயல் ஓயும்; அமைதி உருவாகும்; புதுவாழ்வு பிறக்கும்; வசந்தம் உண்டாகும். அதற்கு முன்னதாக கும்பகோணம் அருகில் குடவாசல் வழி சேங்காலிலிபுரம் சென்று, தத்தாத்ரேயருக்கு ஒருமுறை அபிஷேகம் செய்யவும். அடுத்து சேலத்தில் நீங்கள் இருந்தால் நாமக்கல் அருகில் சேந்தமங்கலம் சென்று (சாமியார் கரடு ஸ்டாப்) தத்தாத்ரேயர்- குருநாதருக்கு முதலில் ஒருமுறை அபிஷேகபூஜை செய்து விட்டு, பௌர்ணமி அல்லது அமாவாசை தோறும் தரிசனம் செய்துவாருங்கள். பஞ்சபாண்டவர்களும், ராமபிரானும் வனவாச வாழ்க்கை முடிந்து ராஜ்ஜியத்தைக் கைப்பற்றியது மாதிரி, உங்கள் வாழ்க்கை யிலும் திருப்பம் உண்டாகும்.
● எம். தாமரைக்கண்ணன், சேலம்.
எனக்கு 28 வயதாகிறது. பி.ஈ., மெக்கா னிக் முடித்தும் ஆறு வருடம் வேலை அமையவில்லை. சிலர் அரசு வேலை வாங்கித் தருகிறேன் என்று பணம் கேட் கிறார்கள். நம்பிக் கொடுக்கலாமா? திருமணம் எப்போது நடக்கும்?
கடக லக்னம், கும்ப ராசி, பூரட்டாதி நட்சத்திரம். 29-5-2019 வரை புதன் தசை தனது புக்தி. இதன்பிறகு நிரந்தர வேலை- அரசு வேலை அமையும். படித்த படிப்புக் கேற்ற வேலையே அமையும். முன்னதாக, தீபாவளி முடிந்ததும் கொஞ்சம் பணம் சேர்த்துக்கொண்டு காரைக்குடி வேலங்குடி யில் சுந்தரம் குருக்களை சந்தித்து 16 வகையான ஹோமம் செய்யவும். தொடர்புக்கு செல்: 99942 74067.